Sunday , December 3 2023
1153871

ODI WC 2023 | இந்திய அணியை டரியல் ஆக்கிய டேரில் மிட்செல்! | Daryl Mitchell key for NZ in 398 chase as required rate goes up

மும்பை: நடப்பு உலகக் கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணிக்கு சவால் அளிக்கும் விதமாக ஆடி இருந்தார் நியூஸிலாந்து அணி வீரர் டேரில் மிட்செல். 119 பந்துகளில் 134 ரன்களை எடுத்த அவர், தந்து ஆட்டத்தால் இந்திய அணியை மிரட்டி இருந்தார்.

398 ரன்கள் இலக்கை துரத்திய நியூஸிலாந்து அணிக்கு டெவான் கான்வேவும், ரச்சின் ரவீந்திராவும் கொஞ்சம் மோசமான துவக்கமே கொடுத்தனர். ஐந்து ஓவர்கள் வரை சுமாராகவே விளையாடி 30 ரன்களை மட்டுமே இக்கூட்டணி சேர்த்தது. ஆறாவது ஓவரை ஷமி வீசினார். தனது முதல் ஓவரின் முதல் பந்திலேயே 13 ரன்கள் எடுத்திருந்த கான்வே விக்கெட்டை அவர் எடுத்தார். அடுத்த ஓவரில் மற்றொரு ஒப்பனரான ரச்சின் ரவீந்திராவையும் அதே 13 ரன்களில் வெளியேற்றினார். இதன்பின் கேப்டன் கேன் வில்லியம்சன் – டேரில் மிட்செல் இணைந்து கூட்டணி அமைத்தனர். இருவரும் நிதானமாக ஆடினர். இதனால் நியூஸிலாந்தின் ஸ்கோர் சீராக உயர்ந்தது.

ஒருகட்டத்தில் இந்திய அணிக்கு சவாலாக அமைந்தது கேன் வில்லியம்சன் – டேரில் மிட்செல் பார்ட்னர்ஷிப். டேரில் மிட்செல்லும், கேன் வில்லியம்சனும் அடுத்தடுத்து அரைசதம் எடுத்ததுடன் அவர்களின் பார்ட்னர்ஷிப் 100+ ரன்களை கடந்தது. வலுவான இக்கூட்டணியை பிரிக்க இந்திய பவுலர்கள் முனைப்பு காட்டினர். 181 ரன்கள் சேர்த்த இக்கூட்டணியை 32.2-வது ஓவரில் பிரித்தார் ஷமி. அதே ஓவரில் டாம் லாதம் விக்கெட்டையும் எடுத்து ஒரே ஓவரில் 2 விக்கெட்கள் வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் ஷமி.

டேரில் மிட்செல்: நடப்பு 50 ஓவர் உலககோப்பையில் தனது 2-வது சதத்தை பதிவு செய்தார் மிட்செல். இந்த 2 சதங்களும் இந்திய அணிக்கு எதிராக பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 119 பந்துகளில் 134 ரன்கள் எடுத்தார் அவர். 9 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். 45.2 ஓவர்கள் வரை களத்தில் பேட் உடன் போராடிய அவர் ஆட்டமிழந்தார். அவருக்கு துணையாக ரன் குவிப்பில் மற்றொரு பேட்ஸ்மேன் ஆடி இருந்தார் ஆட்டத்தின் முடிவே மாறி இருக்கலாம்.

Thanks

Check Also

1162581

இந்தியாவின் 3-வது பெண் கிராண்ட்மாஸ்டர்: தமிழகத்தின் வைஷாலி சாதனை | third Woman Grandmaster of india Tamil Nadu Vaishali achieves chess

ஸ்பெயின் நாட்டில் லோப்ரெகட் ஓபன் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 22 வயதான வைஷாலி 2-வது சுற்றில்துருக்கியை சேர்ந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *