Saturday , December 9 2023
1152355

ODI WC 2023 | அரை இறுதியில் இந்தியா – நியூஸிலாந்து பலப்பரீட்சை | team india to play against new zealand in semi finals cwc

உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத வகையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை பாகிஸ்தான் அணியால் எட்ட முடியாததால் அந்த அணி தனது இன்னிங்ஸை நிறைவு செய்வதற்கு முன்னரே அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதைத் தொடர்ந்து கடைசி அணியாக நியூஸிலாந்து அரை இறுதி சுற்றில் நுழைந்தது. அந்த அணி 10 புள்ளிகளுடன் நிகர ரன் ரேட்டை 0.743 ஆக வைத்திருந்தது சாதகமாக அமைந்தது.

ஏற்கெனவே இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரை இறுதியில் கால்பதித்த நிலையில் தற்போது நியூஸிலாந்தும் இணைந்துள்ளது. வரும் 15-ம்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. 16-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அரை இறுதியில் வெற்றி பெறும் அணிகள் சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் 19-ம் தேதி மல்லுக்கட்டும். இந்த ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

Thanks

Check Also

1165276

பார்முலா 4 பந்தயங்கள் காலவரையரையின்றி ஒத்திவைப்பு | Formula 4 races postponed indefinitely

Last Updated : 09 Dec, 2023 06:53 AM Published : 09 Dec 2023 06:53 AM …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *