Saturday , December 9 2023
1153875

eCOM, இன்ஸ்டா இஎம்ஐ கார்டு மூலம் பஜாஜ் ஃபைனான்ஸ் கடன் வழங்குவதை நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவு | RBI directs Bajaj Finance to stop disbursement of eCOM and Insta EMI card loans

மும்பை: பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் eCOM மற்றும் இன்ஸ்டா இஎம்ஐ கார்டு மூலம் கடன் வழங்குவதை நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. டிஜிட்டல் முறையில் கடன் வழங்குதல் தொடர்பான தற்போதைய விதிகளை கடைபிடிக்காத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சுலப மாத தவணை முறையில் பொருட்கள் வாங்கவும், நிதி சார்ந்த கடன் பெறவும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் உதவி வருகிறது. இந்த நிறுவனம் நாள்தோறும் இந்தியாவில் பல்வேறு வகையிலான கடன்களை வழங்கி வருகிறது. இந்த சூழலில் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் இரண்டு புராடக்ட்களின் கீழ் கடன் வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் பிரிவு 45L(1)(b)-ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடன் வாங்குபவர்களுக்கு கடன் குறித்த அசல் அறிக்கையை வழங்காதது மற்றும் கடன் சார்ந்த அறிக்கைகளில் உள்ள குறைபாடுகளும் தான் தடை விதிக்க காரணம். இதை விதிகளுக்கு உட்பட்டு தீர்வு காணப்படும் பட்சத்தில் தடை குறித்து மறு பரிசீலனை செய்யப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Thanks

Check Also

1164885

மிக்ஜாம் வெள்ளத்தால் ஓசூரிலிருந்து சென்னைக்கு மலர்கள் அனுப்புவது பாதிப்பு | Sending flowers from Hosur to Chennai is affected

ஓசூர்: சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக, ஓசூரிலிருந்து மலர்களை சென்னைக்கு அனுப்புவது பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமை வெகு விரைவில் சீராகும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *