Sunday , December 3 2023
1153254

1,000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது கமலின் ‘ஆளவந்தான்’ | kamal haasan starre Aalavandhan movie re release says Kalaippuli S Thanu

சென்னை: கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், படம் விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளார்.

கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து திரையரங்குகளில் வெளியான படம் ‘ஆளவந்தான்’. சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியிருந்தார். தயாரிப்பாளர் தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரித்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன், ஃபாத்திமா பாபு, ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சங்கர் எஹெசான் லாய் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

படத்தில் கமல்ஹாசன் நாயகனாகவும், வில்லனாகவும் இரண்டு வெவ்வெறு தோற்றங்களில் நடிப்பில் மிரட்டியிருப்பார். உளவியல் சிக்கலைப்பேசும் இப்படம் கடந்த 2001-ம் ஆண்டு இதே நாளில் வெளியானது. படம் வெளியாகி 22 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தாணு தனது எக்ஸ் தள பக்கத்தில், “எழிலோடும்.. பொழிலோடும்.. ‘ஆளவந்தான்’ விரைவில் வெள்ளித்திரையில்.” என பதிவிட்டுள்ளார். மேலும் அவர் பகிர்ந்துள்ள போஸ்டரில் உலகமெங்கும் 1000 திரையரங்குகளில் படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செய்தி கமல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

Thanks

Check Also

1162636

திரை விமர்சனம்: அன்னபூரணி | annapoorani movie review

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமிக்கு பிரசாதம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர் அன்னபூரணி ( நயன்தாரா). சிறு வயதிலிருந்தே உணவு சமைப்பதில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *