Thursday , November 30 2023
Ladys finger

வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி – தூத்துக்குடி விவசாயிகள் கவலை

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம், கைலாசம், பசுவந்தனை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 2000 ஏக்கருக்கு மேலாக வெண்டைக்காய் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் வெண்டைக்காய் தூத்துக்குடி, கோவில்பட்டி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படும். ஆனால், தற்போது ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.3-க்குத் தங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

முறையாக நீர் பாய்ச்சி, உரம் வைத்து பேணியதால் விளைச்சல் அதிகமாக இருந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒரு கிலோவுக்கு வெறும் ரூ.3 மட்டுடே கிடைப்பதால் வெண்டைக்காய் பறிப்பவர்களுக்கு கூலி வழங்க கூட முடியாத நிலை உள்ளதாக வேதனையடைந்துள்ளனர். இதனால் வெண்டைக்காயை பறிக்காமல் கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கண்ணீர் வடிக்கின்றனர்.

தமிழ்நாடு அரசு வெண்டைக்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யவும், அரசின் பசுமைப் பண்ணை காய்கறி கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடி மூலமாக விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி

செய்தியாளர் : மகேஷ்வரன்,  தூத்துக்குடி

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Thanks

Check Also

anbil 4

வாகைக்குளம் சுங்கச்சாவடி தொடர்பாக நீதிபதிகள் கடும் அதிருப்தி

வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க பிறப்பித்த ஆணையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது தூத்துக்குடி – நெல்லை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *