சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ‘வந்தே பாரத்’ ரயில் சேவை தொடங்கவுள்ளது வரவேற்கத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தின் 2-வது பெரிய நகரமாக கோவில்பட்டி இருக்கிறது.மேலும் தென்காசி, சங்கரன்கோவில், திருவேங்கடம், ராஜபாளையம் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கும், வணிகர்களுக்கும் முக்கிய ரயில் போக்குவரத்து கேந்திரமாக கோவில்பட்டி ரயில் நிலையம் அமைந்துள்ளது.
எனவே, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ‘வந்தே பாரத்’ ரயில் நின்று செல்ல மத்திய அரசும், ரயில்வே நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.