ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே நூறு ஏக்கருக்கு மேல் மழை நீரில் நெற்பயிர் மூழ்கி சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முதுகுளத்தூர் அருகேயுள்ள கீழக்குளம் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட அப்பனேந்தல், கேளல், அ.நெடுங்குளம் உள்ளிட்ட கிராமங்களில், சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்குப் பருவ மழையால் அங்குள்ள கண் மாய்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. மேலும் அப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்துள்ள வயல்களிலும் மழைநீர் தேங்கியது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி அழுகத் தொடங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கண்மாய் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் வயலில் தேங்கிய நீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இது தொடர்பாக வேளாண் மைத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.