மொஹாலி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மொஹாலியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிபட்சமாக டேவிட் வார்னர் 53 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தார். ஜோஷ் இங்லிஸ் 45, ஸ்டீவ் ஸ்மித் 41, மார்னஷ் லபுஷேன் 39, கேமரூன் கிரீன் 31, மார்கஸ் ஸ்டாயினிஸ் 29, பாட் கம்மின்ஸ் 21, மிட்செல் மார்ஷ் 4 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் மொகமது ஷமி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.