Thursday , November 30 2023
1085227

மார்க் ஸுகர்பெர்க்குடன் சண்டை நேரலையில் காண எலான் மஸ்க் அழைப்பு | Elon Musk invites to fight Mark Zuckerberg live

கலிபோர்னியா: “மார்க் ஸூகர்பெர்க்குடன் சண்டையிடுவதற்கு உடலை தயார் செய்து வருகிறேன். இந்தச் சண்டையை ட்விட்டரில் நேரலையில் காணலாம்” என்று எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்க், கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். தற்போது ட்விட்டர் என்ற பெயரையே ‘எக்ஸ்’ என்று மாற்றியுள்ளார். இந்தச் சூழலில், தற்போது மற்றொரு சமூக வலைதள நிறுவனமான மெட்டாவின் சிஇஓ மார்க் ஸூகர்பெர்க்குடன் நேரலையில் சண்டையிட இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

எலான் மஸ்குக்கும் ஸூகர்பெர்க்கும் நீண்ட நாட்களாகவே மோதல்இருந்து வருகிறது. ஸூகர்பெர்க்குடன் கூண்டுக்குள் நேருக்கு நேர் சண்டையிட தயாராக இருக்கிறேன் என்று கடந்த ஜூன் மாதம் எலான் மஸ்க் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்த மோதலுக்கு தானும் தயார் என்று ஸூகர்பெர்க்கும் சம்மதம் தெரிவித்தார்.

இதனிடையே, ட்விட்டர் நிறுவனத்துக்குப் போட்டியாக மெட்டா நிறுவனத்தின் ‘த்ரெட்ஸ்’ செயலி அறிமுகமானது. ட்விட்டர் போலவே, இதில் எழுத்துகள், புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட முடியும்.

இந்நிலையில் மெட்டா நிறுவனத்தை விமர்சிக்கும் விதமாக, “வலியை மறைத்துக்கொண்டு போலி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருப்பதைவிடவும் முன்பின் தெரியாதவர்களால் தாக்கப்படும் ட்விட்டரில் இருப்பது சிறந்தது” என்ற ரீதியில் எலான் மஸ்க் பதிவிட்டார்.

இந்நிலையில், ஸூகர்பெர்க்குடன் நேருக்கு நேர் மோத இருப்பதாக எலான் மஸ்க் மீண்டும் பதிவிட்டுள்ளார். இந்த சண்டை ‘எக்ஸ்’ (ட்விட்டர்) தளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள அவர், “ஆண்களுக்கு போர் புரிவது பிடிக்கும். இது நாகரிகமான போர். இந்தப் போர் மூலம் கிடைக்கும் வருமானம் படைவீரர்களுக்குச் செல்லும்” என்று தெரிவித்துள்ளார்.

Thanks

Check Also

1160783

“பயங்கரவாதத்தை சற்றும் பொறுத்துக் கொள்ளாத கொள்கையுடன் அணுகுகிறோம்” – ஐ.நா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு | India has zero-tolerance approach to terrorism: Ruchira Kamboj reaffirms long-standing relationship with Palestine

நியூயார்க்: பயங்கரவாதத்தை சற்றும் பொறுத்துக் கொள்ளாத கொள்கையுடன் அணுகுகிறோம் என ஐ.நா. பொதுச்சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *