Tuesday , November 28 2023
1154774

மருத்துவ கல்லூரிகளில் ஆதாருடன் பயோமெட்ரிக் வருகைப்பதிவு | Biometric Attendance with Aadhaar in Medical Colleges

சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் வருகைப்பதிவு, மருத்துவப் பதிவேடு மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தும் நடவடிக்கைகளில் சந்தேகங்கள், உதவிகளுக்கு இமெயில் முகவரிகளை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.

மருத்துவர்கள், மருத்துவப் பேராசிரியர்களின் வருகையைப் பதிவு செய்ய ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் முறையைக் கடைபிடிக்க தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியது. நோயாளிகளின் விவரங்கள் அடங்கிய மருத்துவப் பதிவேட்டைப் பராமரிக்க வேண்டும். குறிப்பிட்ட இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டது.

மேலும், ஆணைய அதிகாரிகள்,மருத்துவக் கல்லூரிகளில் அவ்வப்போது ஆய்வு செய்கின்றனர்.

இந்நிலையில், மருத்துவக் கல்லூரிகளில் ஆதாருடன் கூடியபயோமெட்ரிக் வருகைப் பதிவு, மருத்துவப் பதிவேடு மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தும் நடவடிக்கைகளில் சந்தேகங்கள், உதவிகளுக்கு பிரத்யேக இமெயில் முகவரிகளை ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஆதார் பயோமெட்ரிக் வருகைப்பதிவுக்கு [email protected] என்ற இமெயில் முகவரியிலும், மருத்துவப் பதிவேடு நடைமுறைகளுக்கு [email protected] என்ற இமெயில் முகவரியிலும், சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு [email protected] என்ற இமெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

Thanks

Check Also

1160111

குருநானக் போதனை அமைதியை மேம்படுத்தும்: ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து | Guru Nanaks teachings promote peace

சென்னை: குருநானக் ஜெயந்தியையொட்டி வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, குருநானக்கின் போதனைகள் உலக அமைதியைமேம்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். சீக்கிய மதத்தின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *