பழைய காமெடி கூட்டணி வந்தால் இணைந்து நடிக்க தயார் என நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நகைச்சுவை நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த நடிகர் வடிவேலுவை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்களின் ஆரவாரத்தால் வடிவேலு சிக்கித் தவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு , ‘ எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்பு பெற்றது. என்ன மணக்குறைகள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் சன்னிதானம் வந்தால் மணக்குறைகள் நீங்கும் என தெரிவித்தார்.மேலும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் படங்களான வாரிசு, துணிவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தவர் 2 படங்களுமே வெற்றியடைய வேண்டும். எல்லா படங்களும் பெரிய வெற்றிபெறண்டும் சினிமா நல்லா இருந்தால்தான் அனைவரும் நன்றாக இருக்க முடியும் என விருப்பம் தெரிவித்தார்.நான் எந்த கட்சியிலும் கூட்டணியிலும் இல்லை. என்னுடைய முந்தைய காமெடி நடிகர்கள் கூட்டணி வந்தால் இணைந்து நடிக்கவேண்டியதுதான் என தெரிவித்தார்.
மேலும் மாமன்னன், சந்திரமுகி 2 என நிறைய படங்கள் நடித்துவருகிறேன் என்று தெரிவித்த அவர்நாய் சேகர் ரிட்டென் படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். பலரும் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக போன் செய்து வாழ்த்து சொல்லி பாராட்டி வருவதாக தெரிவித்த அவர் நாய் சேகர் ரிட்டன் வெற்றியால் தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார்.நான் மீண்டும் திரைக்கு வந்தது மக்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்தும் கடவுளின் ஆசிர்வாதம் என அவர் தெரிவித்தார்.