சென்னை: புரிதல் இல்லாமல் நீட் தேர்வை விமர்சிக்கக் கூடாது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் ‘பூஜ்யம்’ மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு கல்லூரியில் சேர இடம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை தவறாக விமர்சிப்பவர்களுக்கு நீட் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண், பூஜ்யம் பெர்சன்டைல் என்றால்என்ன? என்பது குறித்த புரிதல் முதலில் இருக்க வேண்டும்.