Tuesday , November 28 2023
1126643

புதிய மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: இளநிலை பொறியாளர் கைது | Bribe of Rs 1000 to provide new electricity connection

சென்னை: சென்னை அடையாறில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டார். துரைப்பாக்கம் ரேடியல் சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் அடையாறு தாமோதரபுரம் புதிய தெருவில் வீடு கட்டி வருகிறார்.

இதற்கு மும்முனை மின் இணைப்பு பெறுவதற்காக, பெசன்ட் நகரில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் அண்மையில் விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலனைசெய்த மின்சார வாரிய இளநிலை பொறியாளர் பாலசுப்பிரமணியன், மின் இணைப்பு வழங்க ரூ.40 ஆயிரம்லஞ்சம் தரும்படி கேட்டார்.

மேலும், முன் பணமாக ரூ.10,000 முதலில் தர வேண்டும் எனக் கூறினாராம். ஆனால், லஞ்சம் வழங்க விருப்பம் இல்லாத கிருஷ்ணகுமார், இது தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ரூ.10,000-த்தை கிருஷ்ணகுமாரிடம் கொடுத்து, அதை பாலசுப்பிரமணியனிடம் லஞ்சமாக வழங்கும்படி கூறினர்.

அதன்படி கிருஷ்ணகுமார், நேற்று முன்தினம் பெசன்ட் நகர் மின்வாரிய அலுவலகத்தில் வைத்து வழங்கினார். பாலசுப்பிரமணியன், அதைப் பெற்றதும் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Thanks

Check Also

1160115

சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு; செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22.19 அடியாக உயர்வு | Increase in water supply to Chennai drinking water lakes

ஸ்ரீபெரும்புதூர்/ திருவள்ளூர்: மழையால் மீண்டும் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 532 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *