திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் காரையார் அணைக்கு மேலே பாணதீர்த்தம் அருவி உள்ளது. பாணதீர்த்தம் அருவியை பார்வையிட 9 ஆண்டுகளுக்கு பின்னர் செப்டம்பர் 18ம் தேதி முதல் வனத்துறை அனுமதி வழங்கியது. இந்த பாண தீர்த்த அருவிக்கு வான தீர்த்தம் என்ற பெயரும் உண்டு.
இந்த அருவிக்கு செல்வதற்கு கோடை காலமே மிகவும் உகந்தது. இந்த அருவிக்கு காரையார் அணை வழியாக படகு சவாரி மூலமாக சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பாதுகாப்பு உள்பட பல்வேறு காரணங்களால் சுற்றுலா பயணிகள் பாணத்தீர்த்த அருவிக்கு செல்ல சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் திடீரென தடை விதிக்கப்பட்டது.
எனவே மீண்டும் பாணத்தீர்த்த அருவிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அருவியை காண மட்டும் வனத்துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
பாணதீர்த்தம் அருவியை சுற்றுலா பயணிகள் காண்பதற்கு ஏதுவாக 10 இருக்கைகள் கொண்ட காரில் நபர் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் நுழைவு சீட்டு முண்டந்துறை வனச்சரகத்தில் பெற்றுக் கொண்டு, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையிடுவதற்கு மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டது.இந்நிலையில் முண்டந்துறை வனச்சரகர் கல்யாணி சுற்றுலாப் பயணிகள் முன்பதிவுக்கு தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளார்.
அதன்படி 04634-211994 என்ற தொலைபேசி எண்ணில் சுற்றுலாப் பயணிகள்அனுமதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.படகில் சென்று பார்ப்பதற்கு அனுமதி இல்லை. அதேசமயம், அருவிக்கு அருகில் செல்லவோ அருவியில் குளிக்கவோ தொடர்ந்து தடை நீடிக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.