Sunday , December 3 2023
1126329

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 498 புள்ளிகள் வீழ்ச்சி | Sensex plunged 498 points

மும்பை: பங்குச்சந்தை இன்று காலை 10:33 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 498.77 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 66,302.07 ஆக இருந்தது. இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (வியாழக்கிழமை) சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 307 புள்ளிகள் சரிவடைந்து 66,493 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 77 புள்ளிகள் சரிந்து 19,823 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கின. காலை 10:33 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 498.77 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 66,302.07 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 141.85 புள்ளிகள் சரிந்து 19,759.55 ஆக இருந்தது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்திருக்கிறது. இதனால் மீண்டும் வட்டி விகிதம் உயரலாம் என்ற எண்ணம் உருவாகியிருப்பது, உலகளாவிய சந்தைகளின் பலவீனமான சூழல் போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் மூன்றாம் நாள் சரிவுடன் தொடங்கின. பெரும்பான்மையான பங்குகள் சரிவில் இருந்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டெக் மகேந்திரா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஜெஎஸ்டபில்யூ பங்குகள் உயர்வில் இருந்தன. பஜாஜ் ஃபின்சர்வ், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், எம் அண்ட் எம், ஐடிசி, எல் அண்ட் டி, ஏசியன் பெயின்ட்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்போசிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், சன்பார்மா இன்ட்ஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ், கோடாக் மகேந்திரா பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், பாவர் கிரிடு கார்ப்பரேஷன், டைட்டன் கம்பெனி, பாரதி ஏர்டெல், என்டிபிசி பங்குகள் சரிவில் இருந்தன.

Thanks

Check Also

1162247

முதல்வர் திறந்து வைத்து 5 மாதமாகியும் புதிதாக கட்டப்பட்ட சேலம் – வஉசி பூ மார்க்கெட் பயன்பாட்டுக்கு வராததால் வேதனை | new construction flower market issue in salem

சேலம்: சேலம் சின்ன கடைவீதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வஉசி பூ மார்க்கெட் கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *