Thursday , November 30 2023
1125798

பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 796 புள்ளிகள் சரிவு | Sensex fell 796 points

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 796 புள்ளிகள் (1.18 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 66,800 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 231 புள்ளிகள் (1.15 சதவீதம்) வீழ்ந்து 19,101 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கின. காலை 10:16 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 618.15 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 66,978.69 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 124.05 புள்ளிகள் சரிந்து 20,009.25 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பாதகமான சூழல், அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் மீதான எதிர்பார்ப்பு காரணமாக முதலீட்டாளர்களிடம் இருந்த எச்சரிக்கை உணர்வு, லாபம் குறித்த உந்துதல் காரணமாக பங்குச்சந்தைதள் ஏற்ற இறக்கத்துடனேயே பயணித்தது. ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகளின் சரிவு இன்றைய வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. இதனால் இந்திய பங்குச்சந்தைகள் 1 சதவீதத்துக்கும் கீழாக குறைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 796 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 66,800.84 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 231.90 புள்ளிகள் வீழ்ந்து 19,901.40 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஏசியன் பெயின்ட்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி, டிசிஎஸ் பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன.

ஹெச்டிஎஃப்சி, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல்,ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல்ஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, இன்டஸ்இன்ட் பேங்க், பாரதி ஏர்டெல், டைட்டன் கம்பெனி, எஸ் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்ட்லே இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்போசிஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

Thanks

Check Also

1161276

“ஸ்மார்ட் மீட்டர்” மூலம் மின் கணக்கீடு துல்லியமாக இருக்கும்: தமிழ்நாடு மின்நுகர்வோர் சங்கத்தினர் தகவல் | Electricity Billing will be Accurate with “Smart Meter”: TN Electricity Consumers Association Informs

கோவை: நெட்வொர்க் தொடர்பான பிரச்சினைகள், தகவல்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பிரச்சினைகள் ஏற்படாத வகையில் சிறப்பான முறையில் ஸ்மார்ட் மீட்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *