Tuesday , November 28 2023
1126370

நெல்லை – சென்னை ‘வந்தே பாரத்’ ஒத்திகை தொடக்கம் – செப்.24 முதல் ரயில் இயக்கம் | Vande Bharat train came Madurai

மதுரை: நெல்லை – சென்னை இடையே ‘வந்தே பாரத்’ துரித ரயில் செப்டம்பர் 24 முதல் இயக்கப்படுகிறது. இதற்கான ஒத்திகை ரயில் இன்று மதியம் 1.30 மணிக்கு மதுரை ரயில் வந்தடைந்தது. இதன்பின், நெல்லைக்கு புறப்பட்டுச் சென்றது.

நெல்லை – சென்னை உட்பட இந்தியா முழுவதும் 9 ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை செப்டம்பர் 24-ல் பிரதமர் மோடி காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார். இதற்காக நெல்லை – மதுரை மற்றும் சென்னை இடையே அந்தந்த ரயில்வே கோட்டம் சார்பில், தண்டவாள ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ப.அனந்த் கூறுகையில், ”செப்.24-ம் தேதி, பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு பிறகு நெல்லை – சென்னை உட்பட தெற்கு ரயில்வே பிரிவில் 3 ரயில்கள் என மொத்தம் 9 ‘வந்தே பாரத் ரயில்’ சேவைகளைத் தொடங்கி வைப்பதாக ரயில்வே வாரியத்திடம் இருந்து தகவல் வந்தது.

இதையொட்டி ரயில் பாதைகளை ஆய்வு செய்து, வாரியத்திற்கு அறிக்கை அனுப்ப நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். இதற்கு பிறகு விழா நேரம் அறிவிக்கப்படும். நெல்லையில் தான் தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. முதல் கட்டமாக 8 பெட்டிகளுடன் இச்சேவை தொடங்குகிறது. டிக்கெட் போன்ற விவரம் பிறகு அறிவிக்கப்படும். இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் நின்று செல்லும் வகையில் இயக்கப்படும்” என்றார்.

இந்நிலையில், ‘வந்தே பாரத்’ சோதனை ஓட்டத்திற்கான ஒத்திகை ரயில் இன்று சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட்டு நெல்லைக்கு சென்றது. இந்த ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு மதியம் 12.30 மணிக்கும், மதுரைக்கு 1.30 மணிக்கு வந்தடைந்தது. நெல்லை சென்றடைந்த பின், மீண்டும் அந்த ஒத்திகை ரயில் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறது. இதன்பின், சனிக்கிழமைக்குள் 8 பெட்டிகளை கொண்ட ‘வந்தே பாரத்’ ரயில் நெல்லை ரயில் நிலையத்திற்கு வரவழைக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து 24-ம் தேதி மதியம் நெல்லையில் இருந்து தொடங்கி வைக்க, தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பகல் நேர ரயிலான இந்த ரயிலில் தற்போது படுக்கை வசதியில்லை. சீட் மட்டுமே என மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Thanks

Check Also

1160115

சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு; செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22.19 அடியாக உயர்வு | Increase in water supply to Chennai drinking water lakes

ஸ்ரீபெரும்புதூர்/ திருவள்ளூர்: மழையால் மீண்டும் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 532 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *