Tuesday , November 28 2023
sanitation workers

நெல்லையில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்- மாநகராட்சி சார்பில் முன்னெடுப்பு

திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம் டாக்டர் கலைஞர் அரங்கில் வைத்து கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. தூய்மை பணியாளர்களுக்கான இந்த சிறப்பு முகாமில் மேயர் சரவணன், துணை மேயர் கே ஆர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொது மருத்துவம், காசநோய், பல் மருத்துவம், பிசியோதெரபி, காது மூக்கு தொண்டை மருத்துவம், டெங்கு விழிப்புணர்வு, கண் மருத்துவம், மகளிர் நலம், மக்களை தேடி மருத்துவம், ரத்த அழுத்தம், நிலவேம்பு குடிநீர், உப்பு கரைசல், ரத்த பரிசோதனை போன்ற சிகிச்சைகள் தூய்மை பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டது.

மேலும் மேயரின் உத்தரவின்படி தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவ முகாமில் மருந்துகள் இருப்பு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மேயர் சரவணன் கேட்டறிந்தார். தூய்மை பணியாளர்களுக்கு பரிசோதனை செய்த பிறகு அதன் தகவல்கள் அவர்களிடம் கொடுக்கப்பட்டன.

திருநெல்வேலி

திருநெல்வேலி

என்னது சனாதன விநாயகரா..? சங்கரன்கோவிலில் கவனம் ஈர்த்த விநாயகர் ஊர்வலம்..!

குறிப்பாக, முக்கிய பிரச்சினைகள் ஏதேனும் இருப்பின் அவர்களை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Thanks

Check Also

nellai 49

ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு – News18 தமிழ்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் இருந்து நெல்லை மார்க்கமாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *