சென்னை: விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் தமிழ் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக தெலுங்கு, கன்னட போஸ்டர்கள் வெளியான நிலையில் இன்று தமிழ் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
போஸ்டர்கள் எப்படி? – முன்னதாக வெளியான தெலுங்கு போஸ்டரில், ‘KEEP CALM AND AVOID THE BATTLE’ என எழுதப்பட்டிருந்தது. அதற்கு தக்கவாறு சாத்தமான விஜய்யின் படம் கூலான காஷ்மீர் பேக்ரவுண்டில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக வெளியான கன்னட போஸ்டரில் துப்பாக்கிக்குள் விஜய் இருப்பது போன்ற டிசைனில், ‘KEEP CALM AND PLOT YOUR ESCAPE’ என எழுதப்பட்டிருந்தது.