தூத்துக்குடியில் தசரா திருவிழா துவங்க இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் தூத்துக்குடி தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட கொலு பொம்மைகள் தீவிரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 47 வகையான கொலு பொம்மை செட்டுகள் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
தமிழக மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை தசரா. 9 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் இந்த தசரா திருவிழா வருகிற 15ஆம் தேதி துவங்குகிறது. தசரா திருவிழாவை முன்னிட்டு 9 நாட்களும் பெண்கள் வீடுகளில் பல்வேறு விதமான கடவுள்கள் மற்றும் பொம்மைகளை அலங்கரித்து தினமும் வழிபாடு நடத்துவது வழக்கம்.
தசரா திருவிழா கொலு வழிபாட்டிற்காக தூத்துக்குடியில் சிவன் கோவில் அருகே தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை பகுதியில் இருந்து கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு பல்வேறு விதமான அம்மன், சிவன், கிருஷ்ணர், முருகர், விநாயகர் ,பெருமாள் உள்ளிட்ட கடவுள்களின் பொம்மைகள் மற்றும் புது வடிவிலான கல்யாண செட், வளைகாப்பு செட் ,கோவில் திருவிழா செட் ஆறுபடை முருகன் செட், அய்யப்ப சாமி செட், பெருமாள் கோவில் செட், கிரிக்கெட் வீரர்கள் செட், நவ லட்சுமி செட் உள்ளிட்ட 47 வகையான செட் பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளது.
Follow @ WhatsApp : வாட்ஸ் அப் -ல் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் எம்ஜிஆர், திருவள்ளுவர் ,பாரதி ,முனிவர்கள் ,விலங்குகள் விளக்குகள் சாய்பாபா உள்ளிட்ட பொம்மை செட்டுகளும் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளது. பத்து ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை இந்த பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
கொலு பொம்மைகள் வீட்டில் அலங்கரித்து வழிபாடு செய்வதால் இப்பொழுதே இந்த கொலு பொம்மைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாங்கிச் செல்கின்றனர்.
செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.