Tuesday , November 28 2023
1088179

தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை | 9 Tamilnadu fishermen freed

ராமேசுவரம்: இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரை அந்நாட்டு நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து கடலுக்குச் சென்ற வேல்முருகன், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் ஜூலை 25-ல் எல்லை தாண்டியதாகச் சிறை பிடித்தனர்.

படகில் இருந்த சுரேஷ், ஆறுமுகம், முத்துக்குமார், மணிகண்டன், ஜெயசீலன், வேலு, முத்து இருளாண்டி, முகமது பக்ருதீன், ரங்கசாமி ஆகிய 9 மீனவர்களைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி கஜநிதிபாலன் இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறைதண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் 9 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

படகுகளின் உரிமையாளர்கள் ஆவணங்களுடன் செப்.14-ல் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார். 9 பேரும் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Thanks

Check Also

1160111

குருநானக் போதனை அமைதியை மேம்படுத்தும்: ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து | Guru Nanaks teachings promote peace

சென்னை: குருநானக் ஜெயந்தியையொட்டி வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, குருநானக்கின் போதனைகள் உலக அமைதியைமேம்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். சீக்கிய மதத்தின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *