சென்னை: சதீஷ், சுரேஷ் ரவி நடிக்கும் படம், ‘முஸ்தபா முஸ்தபா’. தி மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ளார். இதில், மோனிகா சின்னகோட்லா, மானசா சவுத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, லிவிங்ஸ்டன், சாம்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார். கே.எஸ்.விஷ்ணுஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் பிரவீன் சரவணன் கூறும்போது, “ஒரு நண்பர்கள் குழு, சிக்கல் ஒன்றில் மாட்டிக்கொள்கிறது. அதில் இருந்து அவர்கள் ஒவ்வொருவரும் உதவி செய்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பது கதை.