சேலம்: கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி நேற்று முன்தினம் வரை சேலம் மாவட்டத்தில் 21 சதவீதமும், தருமபுரி மாவட்டத்தில் 31 சதவீதமும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55 சதவீதமும் என சராசரிக்கும் குறைவாக மழை பெய்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 29 சதவீதமும், நாமக்கல் மாவட்டத்தில் 1 சதவீதமும் கூடுதலாக மழை பதிவானது. தென்மேற்கு பருவ மழைக் காலம் கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதியுடன் விலகியது. இதன் பின்னர் அக்டோபர் 29-ம் தேதி வட கிழக்கு பருவமழை தொடங்கி நீடித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் (13-ம் தேதி) வரை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சராசரியை விட, குறைந்த அளவு மழை பதிவானது.
இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, சேலம் மாவட்டத்தில் 228.4 மிமீ., என்ற இயல்பு அளவை விட, 21 சதவீதம் குறைவாக, 180 மிமீ., மழையே பெய்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 225.2 மிமீ. என்ற இயல்பு அளவை விட, 31 சதவீதம் குறைவாக 156.1 மிமீ., மழையே பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 209.9 மிமீ., என்ற இயல்பு அளவை விட, 55 சதவீதம் குறைவாக 94.9 மிமீ., மழை மட்டுமே பெய்தது.
எனினும், ஈரோடு மாவட்டத்தில் 221.8 மிமீ., என்ற இயல்பு அளவை விட, 29 சதவீதம் கூடுதலாக 286.7 மிமீ., மழை பெய்துள்ளது. இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் 192.3 மிமீ., என்ற இயல்பு அளவை விட, 1 சதவீதம் கூடுதலாக 193.8 மிமீ., மழை பெய்துள்ளது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 29-ம் தேதி வட கிழக்குப் பருவமழை தொடங்கி நீடித்து வருகிறது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு வட கிழக்கு பருவ மழையின் போது, கூடுதல் மழை கிடைக்கும் என்பதால், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பற்றாக்குறை ஈடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, சேலம் மாவட்டத்தில் 228.4 மிமீ., என்ற இயல்பு அளவை விட, 21 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.
.