Saturday , December 9 2023
1125569

சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் சங்கமம் கலைத் திருவிழா: நாட்டுப்புற கலைஞர்கள் பதிவு செய்துகொள்ள அழைப்பு | Sangamam Art Festival in 9 districts including Chennai

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நடத்தப்படும் சங்கமம் கலை விழாவில் பங்கேற்க விரும்பும் நாட்டுப்புற கலைஞர்கள் வரும் அக். 6-ம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கலை பண்பாட்டுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2022-23-ம் நிதி யாண்டில் சென்னையில் பொங்கல் விழாவையொட்டி 4 நாட்கள், 18 இடங்களில் ‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ நடைபெற் றது. இது, அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பை பெற்றதால், இந்த ஆண்டு தமிழக பட்ஜெட்டில் ‘சங்கமம் கலை விழா’ சென்னை மற்றும் 8 முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ‘சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சி ராப்பள்ளி ஆகிய இடங்களில் நாட்டுப்புறக் கலை விழாக்கள் அக்டோபர், டிசம்பர் மாதங்களில் முதற்கட்டமாக நடத்தப்படும். இக் கலைவிழா வாயிலாக 3 ஆயிரம் நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன்பெறுவர்.

அதனைத் தொடர்ந்து சென்னையில், அடுத்தாண்டு ஜனவரி பொங்கல் பண்டிகையின்போது பிரம்மாண்டமாக ‘சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ பல்வேறு இடங்களில் நடத்தப்படவுள்ளது. இக்கலை விழாவின் வாயிலாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பயன்பெறுவர்.

அக்.6-க்குள் அனுப்ப வேண்டும்: ‘சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’வில் பங்குபெற விரும்பும் கலைக் குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவை குறுந்தகடு அல்லது பென் டிரைவ்-ல் பதிவு செய்து, அத்துடன் கலை பண்பாட்டுத் துறையின் www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப் பத்தை பதிவிறக்கம் செய்து, முழுமையாக பூர்த்தி செய்து, தொடர்புடைய கலை பண்பாட்டுத்துறையின் மண்டல கலைபண்பாட்டு மைய அலுவலகங்களுக்கு வரும் அக். 6-ம் தேதிக்குள் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

கலை பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தேர்வுக் குழுவால் தகுதியான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, ‘நம்ம ஊருதிருவிழா’வின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thanks

Check Also

1164932

புதுச்சேரியில் ரூ.393 கோடியில் ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அரசு அனுமதி – நடைமுறை என்ன? | Govt approves Rs 393 crore prepaid smart meter installation in Puducherry

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.393 கோடியில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அரசு அனுமதி தந்துள்ளது. மின் மீட்டருக்கான பணத்தை 90 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *