Saturday , December 9 2023
1126743

சந்திரபாபு நாயுடு கைது விவகாரம் – 14 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

அமராவதி: ஆந்திர சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியதும் சந்திரபாபு நாயுடு கைது செய்தது குறித்து விவாதம் நடத்த வேண்டுமென தெலுங்கு தேசம் (டிடிபி) கட்சியினர் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்க மறுத்ததால் சபாநாயகரை சூழ்ந்து கொண்டு டிடிபி கட்சியினர் கோஷம் எழுப்பினர்.

அப்போது, அமைச்சர் அம்படி ராம்பாபு, இந்துப்பூர் எம்எல்ஏ.வும் நடிகருமான பாலகிருஷ்ணாவை பார்த்து ஏளனம் செய்தார். அதற்கு அவர் தனது மீசையை முறுக்கி, தொடையை அடித்து திறன் மேம்பாட்டு பொய் வழக்கு குறித்து விவாதம் செய்ய தயாரா என்று சவால் விட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர், பாலகிருஷ்ணா உட்பட 14 டிடிபி கட்சி எம்எல்ஏ-க்கள் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Thanks

Check Also

1165281

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.க்கு தொடர்புடைய ஒடிசா நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனையில் ரூ.200 கோடி பறிமுதல் | Rs 200 crore seized in Odisha company linked to Congress MP in Income Tax raid

புவனேஸ்வர்: ஒடிசாவைச் சேர்ந்த பவுத் டிஸ்டிலெரி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் கடந்த புதன்கிழமை வருமான வரித் துறை சோதனை மேற்கொண்டது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *