Saturday , December 9 2023
1153124

சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதி விபத்து: ஐ.டி. ஊழியர் உட்பட 4 பேர் உயிரிழப்பு | Car crashes into a tree

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரு கிறார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த புள்ளப்ப நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கீர்த்திவேல் துரை (26). அங்காளம்மன் கோயில் பூசாரி. இவரது நண்பர்களான ஏளூரைச் சேர்ந்தமயிலானந்தன் (24), சதுமுகையைச் சேர்ந்த பூவரசன் (24), ராகவன்(26) ஆகியோர் சத்தியமங்கலம் – கோவை சாலையில் நேற்றுநள்ளிரவில் காரில் பயணித்துள் ளனர். காரை பங்களாபுதூரைச் சேர்ந்த இளையராஜா (33) ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்த சாலையில் உள்ள வேடசின்னானூர் பேருந்து நிறுத்தம்அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கீர்த்திவேல் துரை, மயிலானந்தன், பூவரசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்தகாயமடைந்த ராகவன், சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்தில் பலத்த காயமடைந்த கார் ஓட்டுநர்இளையராஜா, சத்தியமங்கலத் தில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீஸார் கூறும்போது, ‘விபத்தில் உயிரிழந்தவர்களில், மயிலா னந்தன் பனியன் நிறுவன தொழிலாளியாகவும், பூவரசன் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றிலும், ராகவன் ஓட்டுநராகவும் பணிபுரிந்து வந்துள்ளனர். தீபாவளியன்று பட்டாசு வெடித்துவிட்டு, டீ குடிப்பதற்காக காரில் வந்தபோது விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனத்தை ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்தில் பலியான கீர்த்திவேல் துரைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது’ என்றனர்.

Thanks

Check Also

1164932

புதுச்சேரியில் ரூ.393 கோடியில் ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அரசு அனுமதி – நடைமுறை என்ன? | Govt approves Rs 393 crore prepaid smart meter installation in Puducherry

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.393 கோடியில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அரசு அனுமதி தந்துள்ளது. மின் மீட்டருக்கான பணத்தை 90 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *