கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியாவின் துணிநூல் மற்றும் ஆயத்த ஆடைகள் சந்தையில், தொழில்நுட்ப ஜவுளி13 சதவீதம் பங்களிப்பு கொண்டுள்ளது. இந்த துறை ஆண்டுக்கு 12சதவீதம் உயரும், 2030-க்குள் 45பில்லியன் டாலர் அளவுக்கு வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ), தமிழக அரசின் துணி நூல் துறை, மத்திய அரசின் ஜவுளித் துறை ஆகியவை இணைந்து வரும் 17-ம் தேதி கோவையில் உள்ள லீ மெரீடியன் ஹோட்டலில் தொழில்நுட்ப ஜவுளிக் கருத்தரங்கை நடத்துகின்றன.
இதில், தொழில்நுட்ப ஜவுளித் துறையில் உள்ள வாய்ப்புகள், வளர்ச்சி, புதிய முதலீடுகள், பன்னாட்டு சந்தையின் போக்கு குறித்து உள்நாடு மற்றும் வெளிநாட்டு வல்லுநர்கள் பேசுகின்றனர். கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோர் (https://bit.ly/CIITechnicalTextiles) என்ற இணையதள முகவரியில் தொடர்புகொள்ளலாம்.