Sunday , December 3 2023
1154313

கைதிகளின் பற்களை உடைத்த வழக்கு | ஐபிஎஸ் அதிகாரி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: நீதிமன்றத்தில் அரசு தகவல் | Charge sheet filed against IPS officer

மதுரை: விசாரணைக் கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட வழக்கில், ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த அருண்குமார், உயர் நீதிமன்றக் கிளையில்தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

அம்பை காவல் நிலையத்தில் விசாரணைக்குச் சென்ற எனது பற்களை ஏஎஸ்பி பல்வீர்சிங் உடைத்தார். என்னைப்போல பலரின் பற்களை அவர் உடைத்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

அம்பை காவல் நிலையத்தில் மார்ச் 10-ம் தேதி காலை 10 முதல் மார்ச் 11-ம் தேதி இரவு 10 மணி வரையிலான கண்காணிப்புக் கேமரா காட்சிகளை எனக்கு வழங்கவும், வன்கொடுமை வழக்கில் எனக்கு உரிய இழப்பீடு வழங்கவும், சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி அமுதாமற்றும் நெல்லை துணை ஆட்சியரின் விசாரணை அறிக்கையை வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில், “இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது. விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். மனுதாரர் குறிப்பிடும் நாளில் காவல் நிலையசிசிடிவி காட்சிகள் பதிவு செய்யப்படவில்லை. பல்வீர்சிங் உத்தரவின் பேரில், சிசிடிவி கேமரா ஆஃப் செய்து வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து துறை ரீதியாக விசாரணைநடந்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன்னிலையில் நேற்றுவிசாரணைக்கு வந்தது. அப்போதுஅரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசு அனுமதி வழங்கிஉள்ளது. ஐஏஎஸ் அதிகாரி அமுதாவிசாரணை அறிக்கையை மனுதாரருக்கு வழங்க காலஅவகாசம் தேவை” என்றார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை டிச.1-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

.

Thanks

Check Also

1162680

மிக்ஜாம் புயல் | சென்னை மெட்ரோ ரயில் சேவையின் திங்கள்கிழமை அட்டவணையில் மாற்றம் | Trains running tomorrow as per Saturday schedule: Metro Rail Notification

Last Updated : 03 Dec, 2023 07:04 PM Published : 03 Dec 2023 07:04 PM …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *