Saturday , December 9 2023
1127304

கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தது ஏன்? – விஜய் சேதுபதி ‘சென்டிமென்ட்’ விளக்கம் | Why Vijay Sethupathi refrain from signing a film with Krithi Shetty

‘லாபம்’ படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தது குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் லாபம் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது படக்குழுவினர் கீர்த்தி ஷெட்டியை நடிகையாக ஒப்பந்தம் செய்யப்போவதாக கூறினர். அந்த நேரத்தில் ‘உப்பெனா’ (Uppena) படத்திலும் நடித்துக் கொண்டிருந்தேன். ‘உப்பெனா’வில் கீர்த்தி எனக்கு மகளாக நடித்திருந்தார்.

தற்செயலாக, ‘லாபம்’ படக்குழுவினர் என்னுடன் கீர்த்தி ஷெட்டியை எனக்கு கதாநாயகியாக நடிக்க வைக்கும் திட்டமிட்டிருந்தனர். நான் உடனடியாக அதற்கு மறுப்புத் தெரிவித்தேன். ஒரே நேரத்தில் படமாக்கப்படும் இரண்டு படங்களில், ஒன்றில் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டியுடன் மற்றொரு படத்தில் எப்படி ரொமான்ஸ் செய்ய முடியும்? அது ஒரு சங்கடமான சூழ்நிலை என்பதால் ‘லாபம்’ படத்தில் கீர்த்தியை நாயகியாக்க வேண்டாம் என படக்குழுவினரிடம் கூறினேன்” என்றார்.

மேலும், “உப்பெனா பட க்ளைமாக்ஸ் காட்சியில் நான் கீர்த்தியிடம், என்னை நிஜமாகவே உங்களின் தந்தையாக நினைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். எனக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறார். கீர்த்தியைவிட அவர் சில வருடங்களே இளையவர். அதனால்தான் அவரை என் மகளாக நினைத்தேன். அவருடன் நிச்சயமாக என்னால் ரொமான்ட்டிக்காக நடிக்க முடியாது” என்றார் விஜய் சேதுபதி.

Thanks

Check Also

1164916

“சூர்யா ஓர் அற்புதமான நடிகர்” – ‘கங்குவா’ அனுபவம் பகிரும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் | Suriya is an amazing actor says Bobby Deol

சென்னை: “சூர்யா ஓர் அற்புதமான நடிகர்” என ‘கங்குவா’ படத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் தனது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *