Last Updated : 24 Sep, 2023 05:34 AM
Published : 24 Sep 2023 05:34 AM
Last Updated : 24 Sep 2023 05:34 AM

நடிகை ஸ்ருதி ஹாசன், பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தை கமல்ஹாசனுடன் இணைந்து சுயாதீன இசை ஆல்பம் ஒன்றை உருவாக்க இருக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து இசை படைப்பை உருவாக்க இருப்பதாக கமல்ஹாசன் சமீபத்தில் அறிவித்திருந்ததை அடுத்து இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இதுபற்றி ஸ்ருதியிடம் கேட்டபோது, “அது ஒரு மியூசிக்கல் புராஜெக்ட். அது என்ன என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். இது தொடர்பாக உற்சாகமாக உள்ளேன்” என்று கூறியுள்ளார். ஸ்ருதிஹாசன் இதற்கு முன் ‘எட்ஜ்’, ‘ஷீ இஸ் எ ஹீரோ’ எனும் 2 சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்
தவறவிடாதீர்!