Tuesday , November 28 2023
1154431

கன்னடத்தில் நடிகராக அறிமுகமாகும் சாண்டி – மிரட்டல் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | dance master turn actor sandy starrer Rosy movie first look released

சென்னை: கன்னட சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் நடன இயக்குநர் சாண்டியின் ‘ரோசி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பல்வேறு படங்களில் நடன இயக்குநராக பணியாற்றிய சாண்டி விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தில் நடித்திருந்தார். சைக்கோ கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு பலரின் கவன்த்தையும் ஈர்த்தது. இந்நிலையில், சாண்டி தற்போது கன்னட திரையுலகில் நடிகராக அறிமுகமாக உள்ளார். கன்னட இயக்குநர் ஷூன்யா இயக்கும் புதிய படம் ‘ரோசி’. நடிகர் யோகேஷ் நடிக்கும் இப்படத்துக்கு குருகிரண் இசையமைக்கிறார். இப்படத்தில் ஆண்டாள் கதாபாத்திரத்தில் நடிகர் சாண்டி நடிக்கிறார். அவரது தோற்றத்துடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பெண் தோற்றத்தில் டெரரான லுக்கில் சிவப்பு வண்ணம் தெறிக்கும் இந்தப் படத்தின் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு, “ஒரு நடிகராக உங்களின் இந்த புதிய பாதை மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கும் படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

Thanks

Check Also

1160315

“ஞானவேல் பொதுவெளியில் அமீரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” – கரு.பழனியப்பன் | Ameer Vs Gnanavelraja: Gnanavel should apologize to Ameer in public – Karu Palaniappan

சென்னை: ‘பருத்தி வீரன்’ பட விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு, இயக்குநர் கரு.பழனியப்பன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *