சென்னை: “உன்னால் முடியும். நீ பெரிய படத்தை இயக்கு’ என நம்பிக்கை கொடுத்தவர் அஜித். ஆக, எனக்கான வெற்றியை நான் அஜித்குமாருக்கு சமர்பிக்கிறேன்” என ‘மார்க் ஆண்டனி’ படத்தின் சக்சஸ் மீட்டில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான நிகழ்வு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், “படத்தின் கதையை கேட்டதும் நடிக்க ஒப்புக்கொண்ட நடிகர் விஷாலுக்கு நன்றி. என்னுடைய இரண்டாவது படத்தின் தோல்வியிலிருந்து மீண்டு வந்துவிட வேண்டும் என தினமும் நினைப்பேன். அதிலிருந்து மீண்டு வர எனக்கு இந்தப் படம் உதவியிருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றியை எஸ்.ஜே.சூர்யாவுக்கு சமர்பிக்கிறேன். அவர் ஒருபோதும் டயர்டு ஆகவே மாட்டார். அர்ப்பணிப்புள்ள கலைஞர் அவர். எஸ்.ஜே.சூர்யாவுக்கு மட்டும் 8.5 மணி நேரம் கதை சொன்னேன். அப்படியென்றால் அவர் எத்தனை கேள்விகளை கேட்டிருப்பார் எனப் பாருங்கள்.