Tuesday , November 28 2023
1152977

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: அடையாறு ஆற்றின் கீழே 70 அடி ஆழத்தில் இம்மாத இறுதியில் சுரங்கப்பணி தொடங்கும் | Mining will begin later this month at a depth of 70 feet below the Adyar river

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில் பசுமை வழிச்சாலை பகுதியில் அடையாறு ஆற்றின் கீழே 70 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி இந்த மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது. சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் (45.4 கி.மீ.) வரையிலான 3-வது வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் 28 சுரங்கப்பாதை மெட்ரோரயில் நிலையங்களும், 19 உயர்மட்டப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.

இந்த வழித்தடத்தில் பசுமை வழிச்சாலை பகுதியில் 1.2 கி.மீ. தொலைவுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கியது. இதில், முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘காவேரி’, டிபி சாலைக்கு கீழே சுரங்கப்பாதை அமைத்து, திருவிக பாலம் அருகே அடையாறுஆற்றைக் கடந்து, அடையாறு சந்திப்பு நிலையத்தை சென்றடையும். முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் (டிபிஎம்) மூலமாக, இதுவரை 0.674 கி.மீ. வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இங்கு பயன்படுத்தப்படும் `அடையாறு’ என்ற 2-வது இயந்திரம் மூலமாக, இதுவரை சுமார் 90 மீட்டர் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் ஒவ்வோர் கட்டமாக நகர்ந்து வருகிறது. இந்நிலையில், அடையாறுஆற்றின் கீழே 70 அடி ஆழத்தில் சுரங்கப்பாதை பணி இந்த மாதம் இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: 3-வது வழித்தடத்தில் பசுமை வழிச்சாலையிலிருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கானபணியில் இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த 2 இயந்திரங்கள் இந்த மாத இறுதியில் அடையாறு ஆற்றை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, இந்த மாத இறுதியில் அடையாறு ஆற்றில் 70 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 400 மீட்டர் நீளம் கொண்ட அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் வேகம் குறைக்கப்பட்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Thanks

Check Also

1160111

குருநானக் போதனை அமைதியை மேம்படுத்தும்: ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து | Guru Nanaks teachings promote peace

சென்னை: குருநானக் ஜெயந்தியையொட்டி வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, குருநானக்கின் போதனைகள் உலக அமைதியைமேம்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். சீக்கிய மதத்தின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *