லாகூர்: வீரர்களை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதிவருகின்றன. பாகிஸ்தான் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும், அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை தொடரில் இருந்து கிட்டத்தட்ட பாகிஸ்தான் வெளியேறிய நிலைதான்.