Saturday , December 9 2023
1126728

ஆசிய விளையாட்டுப் போட்டி | வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய கால்பந்து அணி | indian football team beats bangladesh in asian games

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு கால்பந்து போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நாளை தொடங்குகிறது. இருப்பினும் கால்பந்து உள்ளிட்ட சில விளையாட்டுகள் முன்னதாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆடவருக்கான கால்பந்தில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 1-5 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில் நேற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசத்துடன் மோதியது.

இதில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 85-வது நிமிடத்தில் சுனில் ஷேத்ரி அடித்த கோல் காரணமாக இந்திய அணி முழுமையாக புள்ளியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது இந்திய அணி. இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் மியான்மருடன் மோதுகிறது.

Thanks

Check Also

1164936

“கோலி உடனான வாக்குவாதம் ஏன்?” – கவுதம் கம்பீர் விளக்கம் | why verbal spat with virat Kohli Gautam Gambhir explains

Last Updated : 09 Dec, 2023 12:38 AM Published : 09 Dec 2023 12:38 AM …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *