Saturday , December 9 2023
1126730

ஆசிய விளையாட்டுப் போட்டி | அரை இறுதியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி | Asian Games Indian women s cricket team in semi final

Last Updated : 22 Sep, 2023 09:01 AM

Published : 22 Sep 2023 09:01 AM
Last Updated : 22 Sep 2023 09:01 AM

1126730
ஷபாலி வர்மா

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியின் கால் இறுதி சுற்றில் நேற்று இந்தியா – மலேசியா அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம் 15 ஓவர்களாக நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது.

ஷபாலி வர்மா 39 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார். ஸ்மிருதி மந்தனா 27, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 47, ரிச்சா கோஷ் 21 ரன்கள் சேர்த்தனர். டக்வொர்த் லீவிஸ் விதிப்படி மாற்றி அமைக்கப்பட்ட 177 ரன்கள் இலக்குடன் மலேசிய அணி பேட்டிங் செய்தது. ஆனால் 2 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விதிமுறையின்படி ஐசிசி தரவரிசையில் ஆசிய அளவில் முன்னணியில் இருக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இந்த வகையில் முதலிடம் வகித்த இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியது.

தவறவிடாதீர்!


Thanks

Check Also

1164866

BAN vs NZ | மழை காரணமாக 2-வது நாள் ஆட்டம் ரத்து | BAN vs NZ second test Day 2 play canceled due to rain

மிர்பூர்: வங்கதேசம் – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் மழை காரணமாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *