Thursday , November 30 2023
Geetha Jeevan Sasikala Pushpa

“அய்யய்யோ விடுங்க ..!” சசிகலா புஷ்பா குறித்த கேள்வியை தவிர்த்த அமைச்சர் கீதா ஜீவன்!

“அய்யய்யோ விடுங்க … நீங்க வேற !” என சசிகலாபுஷ்பா பேச்சு குறித்த கேள்விக்கு அமைச்சர் கீதாஜீவன் பதில் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக சமூகநலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கி பேசினார். அப்போது அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் கர்ப்பிணி தாய்மார்கள் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும், அது குழந்தை வளர்ச்சிக்கு உதவும் என்பதால் ஊட்டசத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், கர்ப்பிணி பெண்கள் டென்ஷன் இல்லமால் இருக்க வேண்டும், வன்முறை காட்சி உள்ள திரைப்படங்களை தவிர்க்க வேண்டும், நடிகர் வடிவேல் நகைச்சுவை காட்சிகளை பார்க்க வேண்டும், மெல்லிய இசை கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் அமைச்சர் கீதாஜீவனை பற்றி பாஜக மாநில துணை தலைவர் சசிகலாபுஷ்பா பேச்சு குறித்து கேட்டதற்கு அய்யய்யோ விடுங்க … நீங்க வேற ! அவ கிடக்கா என கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

Thanks

Check Also

anbil 4

வாகைக்குளம் சுங்கச்சாவடி தொடர்பாக நீதிபதிகள் கடும் அதிருப்தி

வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க பிறப்பித்த ஆணையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது தூத்துக்குடி – நெல்லை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *