Thursday , November 30 2023
Mission Pani 16 1

அனிதா ராதாகிருஷ்ணனிடம் ரூ.60 கோடி சொத்து

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சட்டவிரோதமாக 60 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக அமலாக்கத்துறை தூத்துக்குடி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2001 – 2006 வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அட்சியில் நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் மீது 2006ல் பொறுப்புக்கு வந்த திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறையால்சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த சொத்து குவிப்பு வழக்கை தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையில்  2020 ஆம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்து, அவரது குடும்பத்தினரின் ரூ.6.50 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

தூத்துக்குடி

தூத்துக்குடி

இதனிடையே, அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களை இணைக்கக்கோரி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி கேட்டது.

அமலாக்கத்துறையின் இந்த மனுவை ஏற்றுக் கொண்ட தூத்துக்குடி நீதிமன்றம், கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆவணங்களைத் தாக்கல் செய்த அமலாக்கத்துறை தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கு விசாரணை அக்டோபர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக விசாரணை நடத்தவில்லை என குற்றஞ்சாட்டினார். அனிதா ராதாகிருஷ்ணன் 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவிக்கும் நிலையில், 60 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக அமலாக்கத்துறை வாதிட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி செல்வம் உத்தரவிட்டார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Thanks

Check Also

Plain Feature Image 48

அம்மா உணவக சாப்பாட்டில் அரணை – தூத்துக்குடியில் அதிர்ச்சி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அமமைந்துள்ள அம்மா உணவகத்தில் அரணை (பாம்பு ராணி) இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *